1. Home
  2. தமிழ்நாடு

சேலத்தில் வருகிற 25-ந்தேதி ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்..!

1

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் வருகிற 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 5 நாட்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடக்கிறது. பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அதில் கலந்துகொண்டு பேசுவோர் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட கொண்டலாம்பட்டியில் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.

வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை துறைமுகம் தொகுதியில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் எம்.பி. பாலகங்கா, வேளச்சேரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், தாம்பரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செம்மலை, தி.நகர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரவாயல் தொகுதியில் பெஞ்சமின், பொன்னேரி தொகுதியில் முன்னாள் எம்.பி. வேணுகோபால், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.சேதுராமன், திருவொற்றியூர் தொகுதியில் ஆர்.கமலக்கண்ணன், பெரம்பூர் தொகுதியில் ச.கல்யாண சுந்தரம் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பூந்தமல்லி தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, பெஞ்சமின், திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.விஜயகுமார், ஆலந்தூர் தொகுதியில் நடிகை விந்தியா, மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகு மாறன், ஆவடி தொகுதியில் ராயபுரம் மனோ, விருகம்பாக்கம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, எழும்பூர் தொகுதியில் ராஜ் சத்யன், ஆர்.கே.நகர் தொகுதியில் கே.சிவசங்கரி, செங்கல்பட்டு தொகுதியில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், நடிகை பபிதா ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) சென்னை மாதவரம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, அண்ணாநகர் தொகுதியில் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ஆதிராஜாராம், மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் எம்.பி. ஆ.இளவரசன், சோழிங்கநல்லூர் தொகுதியில் கோபி காளிதாஸ், வில்லிவாக்கம் தொகுதியில் மணவை மாறன் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ராயபுரம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பல்லாவரம் தொகுதியில் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா, அம்பத்தூர் தொகுதியில் முன்னாள் எம்.பி. தாமோதரன், திருத்தணி தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. கோ.சமரசம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் சினிமா இயக்குனர் ஷக்தி சிதம்பரம் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) திரு.வி.க.நகர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், சைதாப்பேட்டை தொகுதியில் முன்னாள் எம்.பி. நா.பாலகங்கா, காஞ்சிபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், ஆயிரம் விளக்கு தொகுதியில் ஆதி ராஜாராம், திருப்போரூர் தொகுதியில் கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like