ஐ.சி.சி.யின் தலைவராக ஜெய் ஷாவுக்கு வாய்ப்பு..?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லே உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. அவர் 3வது முறையாக, தேர்தலில் போட்டியிடமாட்டேன் என அறிவித்துள்ளார்.
இதனால் ஐ.சி.சி.,தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் வேட்புமனுக்களை அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். வரும் டிசம்பர் 1 முதல் ஆரம்பம் ஆகும்.
ஐ.சி.சி., தலைவர் கிரெக் பார்க்லே தனது பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 3வது முறை பதவியில் இருந்து விலகியதை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக உள்ள ஜெய் ஷா மீது அனைவரது பார்வையும் உள்ளது.
ஜெய் ஷா, தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என பரபரப்பாக பேசப்படுகிறது. ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டால், 35 வயதில், அவர் ஐ.சி.சி., வரலாற்றில் இளைய தலைவராக இருக்க முடியும்.
ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என். சீனிவாசன் மற்றும் மனோகர் ஆகியோர் கடந்த காலங்களில் ஐ.சி.சி.,யின் தலைவராக இருந்தவர்கள்.