சற்றுமுன் வெளியானது ஜவான் பிரிவியூ..!

ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பாக கௌரி கான் தயாரிக்கும் படம் ஜவான். இந்த படத்திற்க்கு அனிருத் இசை அமைக்கிறார்.
இந்த படத்தை தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கிய அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, யோகி பாபு, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் விஜய் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
Welcome to the world of JAWAN! #JawanPrevue Out Now - https://t.co/pDG5AIoD12#Jawan releasing worldwide on 7th September 2023, in Hindi, Tamil & Telugu.
— atlee (@Atlee_dir) July 10, 2023
ஜவான் படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் முன்னோட்டம் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி காலை 10.30 மணியளவில் வெளியாகும் என படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் சற்று முன் ஜவான் படத்தின் முன்னோட்டம் வெளியானது
Welcome to the world of JAWAN! #JawanPrevue Out Now - https://t.co/pDG5AIoD12#Jawan releasing worldwide on 7th September 2023, in Hindi, Tamil & Telugu.
— atlee (@Atlee_dir) July 10, 2023