1. Home
  2. தமிழ்நாடு

தீரன் பட பாணியில் திருப்பதியில் உலா வரும் ஜட்டி கேங்..!

1

திருப்பதியில்  ஜட்டி கேங் என்ற கொடூரமான கொள்ளை கும்பல் ஆட்கள் குறைந்த பகுதியில் கொள்ளை அட்டூழியத்தை காட்டி வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், இரவு நேரத்தில் வீட்டின் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டாலோ, வினோத சத்தம் கேட்டாலோ அல்லது தண்ணீர் வெளியேறுவது போன்ற சத்தம் கேட்டாலோ பொதுமக்கள் யாரும் உடனடியாக வெளியே சென்று பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் எளிதில் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக ஜட்டி மட்டுமே அணிந்து கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதாகவும், கையில் கூர்மையான ஆயுதங்கள் வைத்து மிரட்டலில் இறங்குவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், இவர்கள் கொலை கூட செய்ய அஞ்சமாட்டார்கள் எனவும்  எச்சரித்துள்ளனர்.

ஜட்டி கொள்ளை கும்பல் குறைந்த ஆட்கள் இருக்கும் பகுதியில் கைவரிசையை காட்டி வருவதால், அத்தகைய பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.அத்துடன் வெளியூர் செல்லும் போது பொதுமக்கள் காவல் துறையிடம் தகவல் தெரிவித்து விட்டு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். 


 

Trending News

Latest News

You May Like