1. Home
  2. தமிழ்நாடு

ஜெயிலர் பட பாடலுக்கு நடனமாடிய இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுஸுகி..!

1

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 7,000 திரையரங்குகளிலும் தமிழகத்தில் 1,200 திரையரங்குகளிலும் இப்படம் வெளியானது.

ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஒரு வாரமான நிலையில் படத்தின் வசூல் எவ்வளவு என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.முதல் வார முடிவில் உலகம் முழுவதும் ஜெயிலர் படம் ரூ.375.40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வருடம் வெளியான தமிழ் படங்களில் குறுகிய காலத்தில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும்  ஜெயிலர் படைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வெளியான ரஜினிகாந்த் படங்கள் செய்யாத வசூல் சாதனையையும் ஜெயிலர் செய்துள்ளது.

மேலும், இப்படத்தில் இடம்பெற்று உலகளவில் பிரபலமடைந்த காவாலா பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுஸுகி,  ரஜினிகாந்த்தின் மீதான என் அன்பு எப்போதும் தொடரும் என காவாலா பாடலுக்கு நடனமாடிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். தற்போது, இது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 

Trending News

Latest News

You May Like