ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதி!
ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருப்பதை அவரது தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர் உறுதிபடுத்தியுள்ளார். தற்போது சிகிச்சை பெற்று வரும் அவரை இன்னும் ஓரிரு நாள்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார்.
தெற்கு மும்பை பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஃபுட் பாய்சன் காரணமாக ஜான்வி கபூர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் மெல்ல குணமடைந்து வருவதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வந்திருந்த நடிகை ஜான்வி கபூர், படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மும்பை திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது