1. Home
  2. தமிழ்நாடு

ஜன. 10 முதல் 19-ம் தேதி வரை திருப்பதியில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனம்..!

1

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுவது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து கூடுதல் செயல் அதிகாரி வெங்கையாசவுத்திரி, முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்  நடந்தது.

கூட்டத்தில் வெங்கையா சவுத்திரி பேசுகையில்,   2025-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வைகுண்ட வாயில் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 

பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாமல் தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக சிறப்பு தரிசன டிக்கெட் எண்ணிக்கை குறைக்கப்படும்.  இந்த 10 நாட்களில் வி.ஐ.பி. தரிசனம் புரோட்டோகால் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும். 

சிபாரிசு கடிதங்களுக்கான வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் 10 நாட்களுக்கு கைக்குழந்தைகளுடன் பெற்றோர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ராணுவம், என்.ஆர்.ஐ.களுக்கான சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படுகிறது.

ஜனவரி 9-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி நாளான 10-ம் தேதி தங்க ரத ஊர்வலம், 11-ம்தேதி துவாதசியன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like