DNA கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் வாட்சன் காலமானார்..!
டிஎன்ஏவை முதன்முதலில் கண்டறிந்தவர் சுவிஸ் விஞ்ஞானி பிரெட்ரிக் மீஷர் ஆவார். இவர் 1869ம் ஆண்டு 'நியூக்ளின்' என்று பெயரிட்டார். ஆனால், டிஎன்ஏவின் கட்டமைப்பை கண்டறிந்தவர்கள் அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஆங்கில இயற்பியலாளர் பிரான்சிஸ் கிரிக் ஆவர். இவர்கள் 1953ம் ஆண்டு இதைக் கண்டுபிடித்தனர்.
டிஎன்ஏவின் இணை கண்டுபிடிப்பாளரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வாட்சன் 97 வயதில் காலமானார். பிரான்சிஸ் கிரிக் உடனான இவரது புரட்சிகரமான பணி நவீன மரபியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தை மாற்றியது. இவரது மரணத்தை லாங் தீவில் உள்ள கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகம் உறுதிப்படுத்தியது. அங்கு அவர் பல ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.
வாட்சன், பிரிட்டிஷ் இயற்பியலாளர் பிரான்சிஸ் கிரிக்குடன் சேர்ந்து, 1953ம் ஆண்டில் டிஎன்ஏவின் கட்டமைப்பை கண்டுபிடித்தார். இது உயிரியலில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு திருப்புமுனையாகும். மேலும் மரபணு பொறியியல், மரபணு சிகிச்சை மற்றும் உயிரி தொழில்நுட்பத்திற்கு வழி வகுத்தது. இந்த கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் 1962ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் டிஎன்ஏவின் இணை கண்டுபிடிப்பாளரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வாட்சன் 97 வயதில் காலமானார்.