1. Home
  2. தமிழ்நாடு

ஜேம்ஸ் கேமரூனின் 'டைட்டானிக்' படத்தில் நடித்த பிரபல நடிகர் காலமானார்..!

Q

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லட் நடிப்பில் 'டைட்டானிக்' திரைப்படம் வெளியானது.
உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம் வசூலிலும் பல கோடிகளைக் குவித்து ஆச்சரியப்படுத்தியது.
இந்தப் படத்தில் நடிகர் பெர்னார்ட் ஹில் டைட்டானிக் கப்பலின் கேப்டனாக நடித்திருந்தார். ஆபத்தில் சிக்கிய தன் பயணிகளைக் காப்பாற்ற முடியாததை உணர்ந்ததும் பலருக்கும் முன்பாக உயிரிழப்பார்.
அதன்பின், பெர்னார்ட் ஹில் பல திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்றார். இறுதியாக, 'ஃபாரெவர் யங்' (forever young) என்கிற படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் பெர்னார்ட் ஹில் (79) நேற்று (மே.5) காலமானார். 

Trending News

Latest News

You May Like