ஜல்லிக்கட்டில் முதலிடம் பெறும் வீரருக்கு ரூ.8.50 லட்சம் மதிப்பிலான கார் பரிசு..!

நம் தமிழ்நாட்டில் தை மாதம் துவங்கிவிட்டாலே கொண்டாட்டங்களும் துவங்கிவிடும். அத்தகைய கொண்டாட்டங்களில் முக்கியமானது ஜல்லிக்கட்டு ஆகும். மிக நீண்ட கால வரலாற்றை கொண்ட இந்த விளையாட்டிற்கு காளை மாடுகள் பல மாதங்களுக்கு முன்பு இருந்தே தயார் செய்யப்படுகின்றன. அதேபோல் மறுப்பக்கம், மாடுப்பிடி வீரர்களும் பயிற்சிகளை மேற்கொள்ள துவங்கிவிடுவர்.
அந்த அளவிற்கு பிரபலமான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுவது உண்டு. இதில் மிகவும் பிரசித்திப் பெற்றது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆகும். மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம் என்ற பகுதியில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கவும், கலந்துக் கொள்ளவும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து கூட பலர் வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில் மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதலிடம் பெறும் வீரருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பாக ரூ. 8.50 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.