கோவை காந்திபுரம் பகுதியில் அணிவகுத்து நிற்கும் ஜல்லிக்கட்டு காளைகள்!
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் மிகவும் பிரபலம். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து காளைகளானது கொண்டு வரப்படும்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டகையை வரவேற்கும் விதமாகவும், ஜல்லிக்கட்டு காளைகளின் சிறப்புகளை கூறும் வகையில் கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில் ஜவுளி கடை உரிமையாளர் ஐந்து வகையான ஜல்லிகட்டு காளைகளை தன் கடை முன்னே நிறுத்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் தனது கடை முன்பாக வாடிவாசல் போல பந்தல் அமைத்து அதனுள்ளே கண்ணை கவரும் தேனி ஐஸ் மறை, காரியாபட்டி மறை, காங்கேயம் காரி, புலிகுளம் செம்மால், காங்ரஜ் ராஜஸ்தான் எனும் ஐந்து இன ஜல்லிக்கட்டு காளைகள் அலங்காரங்களுடன் அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டுள்ளன.
பார்த்து வருகின்றனர்
பொங்கல் பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் உட்பட பொதுமக்கள் பிரம்மாண்டமாக திமிலுடன் நிற்கும் ஜல்லிக்கட்டு காளைகளை வியப்புடன் பார்வையிட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்காக தயாராகி வரும் தனது காளைகளை கடைக்கு முன்வைத்து வரவேற்பை பெற்ற உரிமையாளர்.. காளைகளை கண்டு ரசிக்கும் பொதுமக்கள்..#Coimbatore | #Jallikattu | #Bulls | #Shop | #PolimerNews pic.twitter.com/Tt7NPiRfJy
— Polimer News (@polimernews) January 6, 2025