1. Home
  2. தமிழ்நாடு

மன்னிப்புக் கோரினார் ஜெயிலர் பட வில்லன்..! என்ன நடந்தது..?

1

மலையாளத்தில் பல்வேறு கதைக்களங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விநாயகன். தமிழில் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துப் பாராட்டைப் பெற்றார்.

இவர் அவ்வப்போது போதையில் பிரச்சினை செய்யும் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகும். மேலும், ஹைதராபாத் விமான நிலையம் உள்ளிட்ட சில இடங்களிலும் போதையில் பிரச்சினை செய்து சர்ச்சையில் சிக்கினார்.

இதனிடையே, கடந்த சில நாட்களாகத் தனது வீட்டின் மாடியில் நின்றுக் கொண்டு சாலையில் போகிறவர்களை ஆபாசமாகத் திட்டும் விநாயகனின் வீடியோ பதிவொன்று இணையத்தில் வைரலானது.



அந்த வீடியோ பதிவில் அவர் பயங்கரமாகக் குடித்திருந்ததும் தெரிந்தது. இந்த வீடியோ பதிவு தொடர்பாகப் பலரும் தங்களுடைய கடும் அதிருப்தியை தெரிவித்தார்கள்.

இந்த வீடியோ பதிவு தொடர்பாக விநாயகன், “சினிமா நடிகராகவும், ஒரு மனிதராகவும் பல பிரச்சினைகள் கையாள வேண்டும். நான் அதனைச் சமாளிக்க முடியவில்லை.

பொதுமக்களிடமும், எதிர்தரப்பினரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்” என்று தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like