1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த வாரம் ஜெயிலர் ஓடிடியில் ரிலீஸ்... அதிகாரபூர்வ அறிவிப்பு..!

1

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் தான் ஜெயிலர்.இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியானது திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது.

இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது…அதனை போல 600 கோடி நெருங்கும் எனவும் சொல்லப்படுகிறது..

இந்த நிலையில் ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சன் திலிப்குமாரை நேரில் சந்தித்து காசோலை மற்றும் புத்தம் புதிய போர்ஷே காரை பரிசாக கொடுத்தார்…

அந்த வீடியோ இணையத்தில் விரலும் ஆனது..மேலும் நடிகர் ரஜினிக்கு BMW X7 மாடல் காரையும், காசோலையையும் வழங்கினார் அந்த புகைப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது..

இந்நிலையில், திரையரங்குகளில் வெளியாகி, பிரம்மாண்ட வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது 


 

Trending News

Latest News

You May Like