1. Home
  2. தமிழ்நாடு

இனி பள்ளிகளில் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும்...குட்மார்னிங் வேண்டாம்..!

1

அரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

தேசப்பற்று நாட்டின் மீதான பெருமையை உணர்த்தும் வகையில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பள்ளிகளில் காலையில் குட் மார்னிங்கிற்கு பதில் ஜெய்ஹிந்த் என சொல்ல மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். 

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தும் போது, மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வைத் தூண்டும். தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின் தியாகங்கள் பற்றி அறிந்துகொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். 

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் மாணவர்களின் எதிர்காலப் பங்கை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களும் சக ஊழியர்களுக்கு வணக்கம் என்று கூறுவதற்கு பதிலாக, ஜெய்ஹிந்த் என்று சொல்ல துவங்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like