ஜெகன் மோகன் வாக்குறுதி : ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள்..!
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார். அதில், அமராவதியை போன்று விசாகப்பட்டினம், கர்னூல் ஆகிய நகரங்களையும் சேர்த்து மூன்று தலைநகரங்கள் அமைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும், அமராவதி சட்டமன்ற தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் வரும் 13 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது