1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!


அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு செய்த நன்மைகளை பட்டியலிட்டார்.

அரசு ஊழியர்களுக்கு கருணைக் கொடையை வழங்கியது, வாரிசுதாரர்களுக்கு பணி நியமனங்களை வழங்கியது, ஈட்டிய விடுப்புக்கு பணம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது, வீடு கட்ட கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றை வழங்கியதும் தி.மு.. அரசு தான் என்று கூறினார்.

அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு கருணை நிதி வழங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்று அவர் தெரிவித்தார். அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை ஏற்படுத்தித் தந்ததும் தி.மு.. அரசு தான் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!

அரசுப் பணிகளில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்தியதும், அரசு ஊழியர்களின் வேலைநிறுத்த காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தியதும், பதவி உயர்வு பாதிக்கப்பட்டிருந்தால் அது சரிசெய்யப்படும் என்று அறிவித்ததும் தி.மு.. ஆட்சியில் தான் என்று கூறினார்.

நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன், அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம். அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை. போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் திமுக ஆட்சியில் கைவிடப்படும் என்று கூறினார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!

ஜி.எஸ்.டி. முதல் வெள்ள நிவாரண நிதிவரை ஒன்றிய அரசு சரியாக வழங்குவதில்லை; கொத்தடிமைகளை போல் ஒன்றிய அரசிடம் கையேந்தும் நிலையில் மாநில அரசு உள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதில் நான் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளேன் என தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் நிதிநிலை சூறையாடப்பட்டுள்ளது; விரைவில் தமிழ்நாட்டின் நிதிநிலை சீராகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. திமுக ஆட்சிக்கு எப்போதெல்லாம் வருகின்றதோ, அப்போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது என்று கூறினார்.

newstm.in

Trending News

Latest News

You May Like