1. Home
  2. தமிழ்நாடு

கடுமையான குளிர்..! நடுங்கும் மக்கள்.. பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு!

1

டெல்லியில் கடுமையான குளிர் காரணமாக கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் ஜனவரி 8 ஆம் தேதியான நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் குளிரின் தாக்கம் குறைந்தப்பாடில்லை. இதனால் பள்ளிகளின் குளிர்கால விடுமுறையை டெல்லி அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி டெல்லியில் குளிர் காலநிலை காரணமாக நர்சரி முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு அதவாது ஜனவரி 12 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "நர்சரி முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நிலவும் குளிர் காலநிலை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு டெல்லியில் பள்ளிகள் மூடப்படும்." என குறிப்பிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like