பெரும் சோகம்..! ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்து இளம் பெண் உயிரிழப்பு!

டெல்லியின் கபாஷெரா பகுதியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் 24 வயது பெண் ஒருவர் ரோலர் கோஸ்டர் சவாரியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரியங்கா என அடையாளம் காணப்பட்ட அந்த பெண் வியாழக்கிழமை தனது வருங்கால கணவருடன் தீம் பார்க்கிற்கு சென்றபோது, ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்ததாக தெரிகிறது. அவரது உடலில் அதிக ரத்த போக்கு, வலது காலில் கிழிந்த காயம், இடது காலில் துளையிடப்பட்ட காயம் என பல காயங்களுடன் மீட்கப்பட்டார்.
அவரது வருங்கால கணவர் நிகில் அவரை மணிப்பால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரியங்கா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதாரத்தம் நடைபெற்றதாகவும், அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ள நிலையில், இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக நிகில் கூறியுள்ளார்.