பெரும் சோகம்..! புஷ்பா 2 கூட்ட நெரிசல்... தாயை தொடர்ந்து மகனும் உயிரிழப்பு..!
‘புஷ்பா 2’ வெளியீட்டின்போது நடந்த சிறப்பு காட்சியில் கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். அன்று மாலையே ஜாமீன் கிடைத்தாலும், அடுத்த நாள் காலையில்தான் அல்லு அர்ஜுன் விடுதலை செய்யப்பட்டார். ஒருநாள் முழுக்கவே அல்லு அர்ஜுன் பற்றிய பேச்சாகவே இருந்தது.
பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணின் மகன் குறித்து மிகுந்த கவலையடைவதாகவும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
புஷ்பா-2 படத்தின் பிரீமியர் ஷோ திரையிட்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது 9 வயது மகன் ஸ்ரீதேஜ் மற்றும் மகன் படுகாயமடைந்தனர். கிம்ஸ் மருத்துவமனையில் சிறுவன் ஸ்ரீதேஜுக்கு செயற்கை சுவாசம் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐதராபாத் காவல் ஆணையர் சி.வி.ஆனந்த் மற்றும் தெலங்கானா மாநில சுகாதாரத்துறை செயலாளர் கிறிஸ்டினா ஆகியோர், அரசு சார்பில் மருத்துவமனைக்கு சென்று, சிறுவனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் ஆனந்த், மூச்சுத்திணறல் காரணமாக ஸ்ரீதேஜ் மூளைச்சாவு அடைந்துள்ளதாகவும், குணமடைய நீண்ட காலம் ஆகும் என்றும் தெரிவித்தார். மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், விரைவில் குணமடைவார் என நம்புவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் கிறிஸ்டினா கூறினார்.
இந்நிலையில் கடந்த 14 நாட்களாக சிகிச்சையில் இருந்த சிறுவன் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தாயை தொடர்ந்து மகனும் இறந்துள்ள இந்த சம்பவம் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.