பெரும் சோகம்..! மதுபோதையில் காரை ஒட்டி விபத்து - கர்ப்பிணி உட்பட இருவர் பலி..!

சென்னை மதுரவாயல் பை-பாஸ் சாலையில் மணிகண்டன் என்ற நபர் குடிபோதையில் காரை எதிர்திசையில் வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது மணிகண்டன் ஓட்டி வந்த கார், மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மீதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மற்றொரு காரில் பயணம் செய்த கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழந்தனனர்.
இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுபோதையில் எதிர்திசையில் காரை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தியதாக டிரைவர் மணிகண்டனை போலீசார் கைதுசெய்ததுடன், அவரது காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.