1. Home
  2. தமிழ்நாடு

பெரும் சோகம்..! பள்ளி விடுதியில் தீ விபத்து: பலியான மாணவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

Q

கென்யா நாட்டின் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் தங்கிப்படிக்கும் வகையில் மாணவர் விடுதியுள்ளது. இதில் பல மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இதனிடையே, பள்ளியில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் கடந்த 5ம் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 13 மாணவர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
இந்நிலையில், தீ விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி மேலும் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனால் தீ விபத்தில் பலியான மாணவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

Trending News

Latest News

You May Like