பெரும் சோகம்..! 150 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/b01b6bafd11289751c0423f0c72ad9d1.webp?width=836&height=470&resizemode=4)
தவுசா மாவட்டத்தில் நங்கல் கிராமத்தில் கடந்த டிச.,09ம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன், அருகே இருந்த 250 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். இதனைப் பார்த்து பதறி போன பெற்றோர், மீட்பு படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
9ம் தேதி இரவு முதல் சிறுவனை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். குழாய் மூலம் ஆக்சிஜன் கொடுத்து சிறுவனுக்கு சுவாசம் கொடுத்து வந்தனர். அதேவேளையில், ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டி சிறுவனை மீட்க முயன்றனர். அப்போது, சிறுவன் மீது மண் சரிந்து விழுந்தது. சுமார் 56 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு, கயிறு மூலம் சுயநினைவில்லாத நிலையில் சிறுவன் மீட்கப்பட்டான்.
உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, சிறுவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன், 56 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டும், உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.