1. Home
  2. தமிழ்நாடு

பெரும் சோகம்..! மங்களூரு அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் பலி..!

1

மங்களூரின் புறநகரில் உள்ள உச்சிலா கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள ஒரு தனியார் பீச் ரிசார்ட்டில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், மைசூரை சேர்ந்த நிஷிதா, பார்விதி மற்றும் கீர்த்தனா என்ற இளம் பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

நீச்சல் குளத்தின் ஒரு பக்கம் 6 அடி ஆழமாக உள்ளதால், முதலில் ஒருவர் உயிரிழந்திருக்க வாய்ப்பு என்றும் அவரை காப்பாற்ற முற்பட்ட மற்ற 2 பெண்களும் நீரில் மூழ்கியிருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like