பெரும் சோகம்..! பிக்-அப் வாகனம் கவிழ்ந்து 18 பேர் பலி..!

பைகா பழங்குடியினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் டெண்டு இலைகளை பறித்து விற்பனை செய்வதை பிரதான தொழிலாக பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று செம்ஹாரா கிராமத்தைச் சேர்ந்த பைகா பழங்குடியினர் பலர் டெண்டு இலை பறிப்பதற்காக காட்டுக்கு சென்றனர்.
பின்னர் இலைகளை பறித்துவிட்டு சுமார் 40 பேர் பிக்கப் வாகனம் மூலம் கிராமத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில், அந்த வாகனம் குக்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பஹ்பானி கிராமத்திற்கு அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பிக்-அப் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். கவர்தா மாவட்டம் பஹ்பானி கிராமம் அருகே தொழிலாளர்களை ஏற்றிச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 8 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அவர்களை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ள்ளனர். இந்த சம்பம் குறித்து தகவல் அறிந்த சத்தீஸ்கர் துணை முதலமைச்சர் விஜய் சர்மா, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.