1. Home
  2. தமிழ்நாடு

இனி துபாயில் மழையோ வெளியிலோ.. கவலை பட தேவையில்லை..!

1

ஐக்கிய அரபு நாடுகளில் சில சமயங்களில் வெயில் அதிகமாக கொளுத்துகிறது சில சமயங்களில் மழை அதிகமாக பொழிகிறது.இதனால் பேருந்து மற்றும் மெட்ரோவில் பயணம் செய்யும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனை சரி செய்யவேண்டும் என ஒரு புதிய திட்டத்தை துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலை சமாளிக்கும் விதமாக, ஸ்மார்ட் குடை சேவை என்கிற சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம். 

முன்னதாக, அடுத்த மூன்று மாதங்களில் துபாயில் இருக்கக்கூடிய பேருந்து நிலையங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் இந்த ஸ்மார்ட் குடை திட்டத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறார்கள். மழை அதிகமாக பொழியும் நேரத்தில் பேருந்து நிலையத்திலோ அல்லது மெட்ரோ நிலையத்திலோ மாட்டிக்கொள்ளும் மக்கள், செல்லவேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் டாக்ஸியை பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இந்த சமயங்களில் இந்த ஸ்மார்ட் குடையை பயன்படுத்தி அவர்களாகவே வழக்கம் போல இடத்திற்கு சென்று கொள்ளலாம் என்கிறார்கள் அதிகாரிகள்.துபாய் மக்களின் Nol கார்டை பயன்படுத்தி இந்த குடைகளை பெறலாம். 

இந்த ஸ்மார்ட் குடை சேவையை இலவசமாக மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவைக்கான செயல்பாடுகள் நேற்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அல் குபைபா பேருந்து நிலையம் மற்றும் மெட்ரா நிலையங்களில் இந்த ஸ்மார்ட் குடைகள் கிடைக்கின்றன. இந்த திட்டம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்த மெட்ரோ நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் இருக்கிறார்களாம்.

Trending News

Latest News

You May Like