இன்னும் 7 நாள் தான் இருக்கு... ஆதார் அப்டேட் செய்யாதவங்க உடனே செஞ்சிடுங்க..!

இன்றைய கால கட்டத்தில் ஆதார் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை முதலியனவற்றை கொண்டுள்ளது. இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக ஆதார் அட்டை கருதப்படுகிறது. ஆதார் எண்ணானது தற்போது வங்கிகள் முதல் ரேஷன் அட்டை வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் பெயர், படம், முகவரி போன்ற விவரங்களை மாற்ற அல்லது புதுப்பிக்க UIDAI வழங்கிய பல சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த சேவைகளை பெற தனியார் பொது சேவை மையங்கள் மட்டுமல்லாமல், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூலம் நீங்கள் அப்டேட் செய்தாலும் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 14 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்பின் பயனர்கள் தங்கள் ஆதார் அட்டையை புதுப்பிக்க மற்றும் திருத்தங்கள் செய்ய விடுக்கப்பட்ட கால அவகாசமானது ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆதரில் இலவசமாக அப்டேட் செய்ய இன்னும் 8 நாட்களே உள்ளது. இதை தவறாது பயன்படுத்தி கொள்ளுங்கள்.