வெறும் 10 மாசம் தான்... திமுக ஆட்சி தூக்கி எறியப்படும் : எல்.முருகன் உறுதி!

பாஜகவின் கையெழுத்து இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்துள்ளதாக எல். முருகன் தெரிவித்தார். அமித்ஷாவின் கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என்றும் தமிழகத்தின் பல்வேறு பெருமைகளை உலகெங்கும் கொண்டு சேர்ப்பவர் பிரதமர் மோடி என தெரிவித்தார்.
தொகுதி மறுசீரமைப்பு பற்றி பொய்யான பிம்பம் கட்டமைத்துள்ளார் ஸ்டாலின் என்றும் மும்மொழி கல்விக்கு இடையூறாக உள்ள திமுக ஆட்சி இன்னும் 10 மாதங்களில் தூக்கி எறியப்படும் என உறுதி பட எல்.முருகன் தெரிவித்தார்.
2026 ல் பாஜக ஆட்சி அமைந்தவுடன் மும்மொழிக் கொள்கை தமிழகத்தில் நடைமுறைக்கு வரும் எல்.முருகன் தெரிவித்தார்.