இன்னும் 1 நாள் தான் இருக்கு..! இதை செய்யாவிட்டால் அரிசி கிடைக்காது..!!

நாடு முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டு (Ration card ) வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி கொடுக்கின்றன. ஒரு குடும்பத்துக்கு 35 கிலோ வரை இந்த அரிசி கொடுக்கப்படுகிறது.ஆனால், இதில் பல முறைகேடுகள் நடப்பதாக மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அந்தியோதயா திட்டத்தின் கீழ் ரேஷன் அரிசி பெறுபவர்களின் தகவல்களை உறுதிபடுத்தி உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த கார்டு வைத்திருப்பவர்கள் பலர் இறந்துள்ளனர். அவர்களைப் பற்றிய தகவலும் மத்திய அரசுக்கு தேவைப்படுகிறது, சிலர் வெளிநாடுகளில், வெளி ஊர்களில் வசிக்கின்றனர். அவர்கள் இந்த திட்டத்தின் கீழ் அரிசி வாங்காமல் இருக்கின்றனர். அவர்களுக்கும் சேர்த்து மாதம் மாதம் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அரிசி அனுப்பிக் கொண்டிருக்கிறது.
இந்த குறைபாடுகளை எல்லாம் களையும் பொருட்டு அந்தியோதயா திட்ட ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் இருப்பை உறுதி செய்யும் வகையில் ஆதார் அங்கீகார சரிபார்ப்பு முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதற்கான காலக்கெடு ஜூன் மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று ஆதார் அங்கீகார சரிபார்ப்பு செயல்பாட்டை இந்த பயனாளிகள் முடிக்க வேண்டும்.
அதாவது, இந்த ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று ஆதார் கார்டு சரிபார்ப்பு மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்து தங்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும்.
இல்லையென்றால் அந்தியோதயா திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் குடும்ப அட்டைகள் ரத்துசெய்யபடும். ஆதார் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு பிரச்சனையில்லை.