இன்னும் முடியல... இன்றும் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஃபெஞ்சல் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் இன்று மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 1) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
மேலும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
.png)