இது சூப்பர்ல்ல...! கள்ள ஓட்டு போட்டதை படம்பிடித்து காட்டிய பாஜக பிரமுகர்...!
தாஹோத் தொகுதிக்கு உட்பட்ட பர்த்தம்பூர் பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியில் பாஜக பிரமுகரின் மகனான விஜய் பபோர் என்பவர் வாக்களிக்க சென்றபோது அவரது இன்ஸ்டிராகிறாமீல் நேரலை ஒளிபரப்பி இருக்கிறார். இதனை தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து இருக்கின்றனர். ஆனால், அவர்களை மிரட்டி தொடர்ந்து நேரலை ஒளிபரப்பி இருக்கிறார் விஜய். மேலும், இரண்டு கள்ளவாக்குகளையும் விஜய் செலுத்தியதாக கூறபடுகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவியது. பாஜக பிரமுகர் செய்த இந்த காரியம் அம்மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த காரியம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மறு வாக்குப்பதிவு நடக்க காங்கிரஸ் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து மகிசாகர் எஸ்பி கூறுகையில், ‘‘இந்த சம்பவம் தொடர்பாக விஜய் பாபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஹோத் காங்கிரஸ் வேட்பாளர் பிரபா தாவியத்,'' கைது செய்யப்பட்ட விஜய் பாபர் உள்ளூர் பாஜக தலைவரின் மகன்.
அவர் தேர்தல் அதிகாரிகளை மிரட்டுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் அவர் ஜனநாயக அமைப்பை அவமதித்துள்ளார். எனவே, ஓட்டுச்சாவடி எண் 220ல் மீண்டும் ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்,'' என்றார். பாஜக ஆளும் மண்ணான குஜராத்தில் பாஜகவினர் கள்ள ஓட்டு போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.