1. Home
  2. தமிழ்நாடு

இது நடிகை ராஷ்மிகா அல்ல... பரவும் போலி வீடியோ..!

1

விஜய் தேவரகொண்டா உடன் நடித்த இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா.தொடர்ந்து புஷ்பா, சீதா ராமம் என்று பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்த அவர், தளபதி விஜய் உடன் "வாரிசு" படத்திலும் நடித்திருந்தார். இப்போது பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ என்று இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.இந்த வீடியோ 20 லட்சத்திற்கும் மேற்பட்டோ பார்வையாளர்களைப் பெற்று டிரெண்டாகி வந்தது.அதில் நடிகை ராஷ்மிகா மந்தனா லிப்ட் ஒன்றில் நுழைவது போல இருக்கிறது. கருப்பு நிற ஆடையில் லிப்ட் மூடும் சில நொடிகளுக்கு முன்பு ராஷ்மிகா மந்தனா அதில் உள்ளே வருவது போல இருக்கிறது.

ராஷ்மிகா மந்தனா என்று சொல்லிப் பரவும் இந்த வீடியோ முதலில் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் பரவ தொடங்கியது. ஆனால், உண்மையில் அந்த வீடியோவில் இருப்பவர் ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ் வாழ் இந்தியப் பெண்.. தன்னை ராஷ்மிகா மந்தனா போல இப்படி டீப் பேக் முறையில் எடிட் செய்துள்ளனர் என்பது ஜாரா படேல் கூட தெரியாது. யாரோ விஷமிகள் செய்த செயல்தான் இது. 


 

Trending News

Latest News

You May Like