1. Home
  2. தமிழ்நாடு

அந்த படங்களை பார்ப்பது குற்றமல்ல - சென்னை உயர்நீதிமன்றம்..!

1

நாடு முழுவதும் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு, இணைய உலகில் குவிந்திருக்கும் ஆபாச படங்களே காரணம் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. மொபைல் போன் பயன்பாடு காரணமாக சிறுவர்களும் ஆபாச படங்களைப் பார்ப்பதாகவும், அதனால், பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. அதேசமயம், ஆபாச படங்களை பார்ப்பது தவறு அல்ல, சிறார் ஆபாச படங்களை தடுப்பது அவசியம் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் ஒருவர் ஆபாச படம் பார்த்ததாக கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. ஆபாச படங்களை ஆன்லைனில் இருந்து டவுன்லோட் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமில்லை என்றும் அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது மேலும் 90ஸ் கிட்ஸ் மது, புகையிலைக்கு அடிமையானது போல், 2கே கிட்ஸ் ஆபாச படங்களுக்க அடிமையாகி உள்ளனர். ஆபாச படங்களை பகிர்வது தான் குற்றம் எனவும் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like