1. Home
  2. தமிழ்நாடு

இனி ஒரே ஜாலி தான்..! இன்று முதல் தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை..!

1

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 2023 – 24 ஆம் கல்வியாண்டு ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. வழக்கமாக ஜூன் முதலாம் வாரத்தில் பள்ளிகள் தொடங்கப்படும். ஆனால் கடுமையான கோடை வெப்பத்தின் தாக்கத்தை தவிர்ப்பதற்காக பள்ளிகள் சிறிது தாமதமாக திறக்கப்பட்டது. இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு நடப்பு காலாண்டு தேர்வு விடுமுறைகள் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி முன்னதாக செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை மட்டுமே 5 நாட்கள் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 9ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதனால் இவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 6 முதல் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அதிக நாட்கள் விடுமுறை கிடைத்திருப்பது கவனிக்கத்தக்கது.

மாணவர்களுக்கான விடுமுறை நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 3ம் தேதி இரண்டாம் பருவ வகுப்புகள் தொடங்க வேண்டும் என்றும் இதற்கான ஆயத்த பணிகளை கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like