நாளை மெட்ரோவில் பயணிக்க வெறும் 5 ரூபாய் தான்..!
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு முக்கிய தீர்வாக மெட்ரோ ரயில் இருக்கிறது.தற்போது சென்னை மாநகரின் பல்வேறு முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையிலான வழித்தடங்களை அமைக்கும் பணிகளும் தற்போது துரிதமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், டிசம்பர் 3-ம் தேதி சென்னை மெட்ரோ ரயிலின் அடித்தள நாள் கொண்டாடப்படுகிறது. 2015-ம் ஆண்டு அன்றைய தினம் தான் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. இதனை கொண்டாடும் விதமாக நாளை டிசம்பர் 3-ம் தேதி மெட்ரோ ரயில்களில் வெறும் 5 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம் என்ற அதிரடி அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அன்றைய தினத்தில் static QR, paytm, whatsapp, phonepe மூலமாக ரூ.5 கட்டணம் செலுத்தி மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பயணத்திற்கு மட்டுமே இந்த டிக்கெட் செல்லுபடியாகும். அதேபோல, மெட்ரோ ரயில் பாஸ் மூலமாகவோ, காகித க்யூஆர் பயணச்சீட்டு மூலமாகவோ பயணித்தால் இந்த சலுகை பொருந்தாது என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.