1. Home
  2. தமிழ்நாடு

இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல...வரலாறு காணாத உச்சத்தில் தங்கம்..!

1

மாறிக்கொண்டே இருக்கும் தங்கத்தின் இன்றைய விலையை தெரிந்து கொள்ள தவறினால், அது பணப்பையை கடிக்கும். எனவே, தங்கத்தை வாங்குவதற்கு முன்பு சந்தையில் தங்கத்தின் இன்றைய விலையை தெரிந்து கொள்வது மிகமிக முக்கியமாகும். ஆபரண விற்பனையாளர்களுக்கு இடையே காணப்படும் விலை வித்தியாசத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒருசில நகரங்களில் தங்கத்தின் விலையை உள்ளூர் தங்க ஆபரண உற்பத்தியாளர் சங்கம் தான் முடிவு செய்கிறது. தங்கத்தின் விலை ஊருக்கு ஊர், கடைக்கு கடை மாறுபடும் வாய்ப்புள்ளது.

Gold-Price

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் உயர்ந்து, ரூ.6,805-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ரூ.54,440-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,509-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 65 ரூபாய் உயர்ந்து, ரூ.5,574-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 88,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,500 ரூபாய் உயர்ந்து, ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.90.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like