1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த சில நாட்கள் இங்கெல்லாம் மழை பெய்யும்...!

1

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வறண்ட மற்றும் வெப்பமான சூழ்நிலையே நிலவும் இந்த மார்ச் மற்றும் ஏப்ரல் முதல் பாதிக்குப் பிறகு, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு ஒரு நல்ல செய்தி வந்து உள்ளது என வேதர்மேன் தெரவித்துள்ளார்.

வானிலையில் ஏற்பட்ட பள்ளம் எனப்படும் trough மற்றும் கிழக்கு காற்றினால், அடுத்த 4-5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்யும். சென்னை வறண்டதாக இருக்கும், அத்துடன் வெப்பநிலை கட்டுக்குள் இருக்கும். பெங்களூரில் 1 அல்லது 2 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் கூறியுள்ளார்.

சென்னை வெயில்: தற்போது சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் இருந்து வருகிறது. அதிலும் மாலை 6 மணியானாலும் வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையிலேயே உள்ளது. கோடைகாலங்களிலேயே மிக மோசமான கோடை காலமாக இந்த வருடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் வெப்பநிலை குறையும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையான அவதிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த வருடத்தில் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து உள்ளது. சில இடங்களில் அதிகபட்சமாக 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தது. ஆனால் இதெல்லாம் வெறும் டீசர்தான். மார்ச் மாத இறுதியில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கெல்லாம் மழை பெய்யும்: 12.04.2024 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

13 மற்றும் 14ம் தேதிகளில் தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என அறிவித்துள்ளனர்.

வரும் 15.04.2023 அன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் அறிவித்துள்ளார்கள்.

மேலும் 16.04.2024 அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறியுள்ளனர்.

இன்று (12.04.2024) முதல் 14.04.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° – 3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் அறிவித்துள்ளார்கள். இச்செய்திக்குறிப்பில் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like