கொட்டப்போகும் மழை..! இன்று தொடங்கும் மழை 4-5 நாட்களுக்கு நன்றாக இருக்கும் - பிரதீப் ஜான்..!
தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னையில் இன்று தொடங்கும் மழை 4-5 நாட்களுக்கு நன்றாக இருக்கிறது. டெல்டா பகுதிகளான நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் இன்று பெரிய நாளாக அமையும். கடலூர் பாண்டிக்கும் கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.
மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கைக்கு கீழாக அமைந்துள்ளது. வடக்கே பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. மெதுவாகச் செல்வது மற்றும் ஸ்தம்பிப்பது காரணமாக நவம்பர் 1ஆம் தேதி வரை அடுத்த 4-5 நாட்கள் தமிழக கடற்கரையோர பகுதிகளில் மழை பெய்யும் என கூறியுள்ளார்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று மழை ஆரம்பம். நல்ல மேகங்கள் நகர்கின்றன, சென்னையில் மழை 27 முதல் பிக்கப் செய்து டிச 1 வரை மழை இருக்கும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னைக்கு கீழே கடற்கரையை தாண்டினால் வட கடற்கரையை கடக்கும் போதும் மழை வரும். எனவே சென்னைக்கு நிறைய மழை நாள். எனவே இன்று முதல் டிசம்பர் 1 வரை மழையை அனுபவியுங்கள் என கூறியுள்ளார்.