வெளுக்கப்போகும் மழை..! 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!

தமிழ்நாட்டில் இன்று கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாயப்பு உள்ளது. திண்டுக்கல், மதுரை, தேனி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளைக் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெயய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
10ம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேநாளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11ம் தேதி கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய 3 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அன்றைய நாளில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாவும் தெரிவித்துள்ளது.
12ம் தேதி தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.