போடுற வெடிய... லியோ வெற்றி விழாவிற்கு போலீஸ் அனுமதி..!

லியோ படத்தின் வெற்றி விழா வரும் நவம்பர் 1-ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடத்த படத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி பெரியமேடு காவல் நிலையத்தில் படத்தயாரிப்பு நிறுவனம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியது. நடிகர் விஜய் கலந்து கொள்வதால் பாதுகாப்பும் கேட்கப்பட்டது.
இந்த நிலையில் லியோ பட வெற்றி விழாவுக்கு காவல் துறை அனுமதி அளித்துள்ளது. முறையான அனுமதி கடிதங்களுடன் விண்ணப்பித்ததால் காவல் துறை அனுமதி அளித்துள்ளது. நேரு உள்விளையாட்டரங்கில் மொத்தம் 8000 இருக்கைகள் உள்ளன.
காவல் துறை 6000 இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது. பார்வையாளர்களுக்கு 5500 இருக்கைகளும் விஐபிகளுக்கு 500 இருக்கைகளும் ஒதுக்கிக் கொள்ளலாம். அரங்கின் மைய பகுதியில் தேவைப்பட்டால் இருக்கைகளை அமைத்துக் கொள்ளலாம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் வைப்புத் தொகையாக ரூ 10 லட்சம் செலுத்த வேண்டும்.
மேலும் 200 முதல் 300 கார்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பஸ்ஸில் வர அனுமதி கிடையாது. சொன்ன நேரத்தில் நிகழ்ச்சியை முடிக்க வேண்டும். இருக்கைளுக்கு ஏற்றபடி ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர்.