போடுற வெடிய..! வெற்றி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்..?
நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி விருதுகள் விழாவை விஜய் நடத்தியிருந்தார்.10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ரிசல்ட்ஸ் வந்துள்ள நிலையில், அடுத்த மாதம் அதே போன்ற நிகழ்ச்சியை நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், ஜூன் 22ம் தேதி விஜய்யின் 50வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு இந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய் கல்வி விருது விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.
— TVK Vijay (@tvkvijayhq) May 10, 2024
விரைவில் நாம் சந்திப்போம்! pic.twitter.com/OUYZYhl5Ni