ஜெட் வேகத்தில் ஸ்பீட் இருக்க போகுது.. 5ஜி-யை தாண்டி 5.5G வரப்போகுதாம்..!
ரிலையன்ஸ் ஜியோ ஆனது அதன் 5ஜி சேவையை விரிவுபடுத்துவதாகவும், அதன் வேகத்தை அதிகப்படுத்த 5.5ஜியை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. அதன் சமீபத்திய கண்டுபிடிப்புகளுடன், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, தொழில்நுட்ப முன்னேற்றங்களில் இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறையில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
2001 ஆம் ஆண்டில் 3ஜி பயன்படுத்தப்பட்டது. இது 2ஜியின் நான்கு மடங்கு தரவு பரிமாற்ற திறன்களைக் கொண்டிருந்தது. அதை தொடர்ந்துதான் 2012-ல் 4ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டன். இது 3ஜியை காட்டிலும் 10 மடங்கு வேகம் அதிகரித்தது.
2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஜியோ அதன் 5ஜி சேவையை அறிமுகம் செய்தது. அதற்கு முன்னதாக 2019 5ஜி சேவை வழங்கும் முதல் நாடாக தென் கொரியா இருந்தது. 5ஜி என்பது சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட மொபைல் நெட்வொர்க் தொழில்நுட்பமாகும். இது ஆக்மென்டட் ரியாலிட்டி (AR), விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) மற்றும் அல்ட்ரா-ஹை-டெபினிஷன் வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற மேம்பட்ட பயன்பாடுகளை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5ஜி என்பது IoT தொழில்நுட்பத்தின் முதுகெலும்பாகவும் உள்ளது, இது ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் தொழில்துறை IoT போன்ற பல்வேறு பயன்பாடுகளை கொண்டிருக்கும்.
இந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ, அதன் மேம்பட்ட 5.5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தி, 10ஜிபிபிஎஸ் வரை அதிவேக இணைய வேகத்தை வழங்குவதாக கூறியுள்ளது. இது ஜியோவின் தற்போதைய 5ஜி சேவைகளுக்கு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலைக் குறிக்கிறது. பயனர்களுக்கு மேம்பட்ட இணைப்பு மற்றும் சிறந்த நெட்வொர்க் நம்பகத்தன்மையை வழங்குகிறது.
ஜியோவின் 5.5ஜி நெட்வொர்க் அதன் 5ஜி சேவையின் மேம்பட்ட பதிப்பாகும். இது தற்போதைய 5ஜி உடன் ஒப்பிடும்போது வேகமான இணைய வேகம், குறைந்த தாமதம் மற்றும் மேம்பட்ட நெட்வொர்க் நம்பகத்தன்மையை வழங்குகிறது. இந்த தொழில்நுட்பம் ஒருங்கிணைந்த நுண்ணறிவு அம்சங்களை உள்ளடக்கியது. இது ஒரே நேரத்தில் பல டவர்களுடன் இணைக்கக்கூடிய மூன்று வெவ்வேறு நெட்வொர்க் செல்களைப் பயன்படுத்துகிறது. இதன் விளைவாக, பயனர்கள் 10Gbps வரை பதிவிறக்க வேகத்தையும், 1Gbps வரை பதிவேற்ற வேகத்தையும் அனுபவிக்க முடியும்.