1. Home
  2. தமிழ்நாடு

கேப்டன் விஜயகாந்த் மறைந்து 1 மாதம் ஆகிறது : பிரேமலதா விஜயகாந்த் முக்கிய உத்தரவு!

1

கேப்டன் விஜயகாந்த் கடந்த 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.விஜயகாந்தின் உடல் 29 ஆம் தேதி மாலை சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல் அடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் நினைவிடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றுடன் கேப்டன் விஜயகாந்த் மரணமடைந்து 30 நாட்கள் ஆகிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மீண்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, வட்டம், கிளை கழகம், கிராமங்கள் வரை உள்ள நமது தேமுதிக கழக கொடியினை ஏற்றி பட்டொளி வீசி பறக்க விட வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

1

Trending News

Latest News

You May Like