“எல்லாம் முடிந்துவிட்டது” : விஜய்சேதுபதி அதிரடி!

நன்றி,வணக்கம் என்றால் எல்லாம் முடிந்துவிட்டது என்றுதான் அர்த்தம் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியது. அப்போது இலங்கை ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த விஜய் சேதுபதி முரளிதரனின் வாழ்க்கை வரலாறு, ஒரு நல்ல கதை என்பதால் அதில் நடிப்பதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என தெரிவித்தார்.
இப்போது முன்வைக்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் படம் பதில் சொல்லும் என்றும் அவர் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட முத்தையா முரளிதரன், இலங்கையில் பிறந்தது என்னுடயை தவறா என்று கேள்வி எழுப்பினார். தான் இலங்கை தமிழர்களுக்கு எதிரானவன் போல் சித்தரித்து சிலர் பேசுவது வருத்தம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆனாலும் 800 திரைப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு தொடர்ந்து எதிர்ப்பு நிலவியது. பினாங்கு துணை முதல்வர், இலங்கை போரினால் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் விஜய் சேதுபதி 800 திரைப்படத்தில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில் தனது சுயசரிதை படமான 800-ல் இருந்து விலகிக் கொள்ளுமாறு நடிகர் விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார். அதில்,விஜய் சேதுபதியின் கலைப்பயணத்தில் வருங்காலத்தில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை விடுப்பதாக கூறியிருந்தார்.
இதனையடுத்து முத்தையா முரளிதரனின் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்கோள்காட்டி பதிவிட்ட விஜய் சேதுபதி, நன்றி வணக்கம் என ட்வீட் செய்தார்.
நன்றி.. வணக்கம் 🙏🏻 pic.twitter.com/PMCPBDEgAC
— VijaySethupathi (@VijaySethuOffl) October 19, 2020
இந்நிலையில் நன்றி, வணக்கம் என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது என்றுதான் அர்த்தம் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். 800 பட விவகாரம் குறித்து முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது, இனி அதில் பேச ஒன்றும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
newstm.in