1. Home
  2. தமிழ்நாடு

எல்லாம் டெக்னாலஜி தான்...! QR CODE மூலம் பிச்சை எடுத்த ஆச்சரியம்.!

1

வாணியம்பாடி கணவாய் புதூர் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் QR கோடு அட்டையை கையில் வைத்துக் கொண்டு டிஜிட்டல் முறையில் பிச்சை எடுத்து வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. யாராவது சில்லறை இல்லை என்றால் அக்கவுண்டில் போடு என்ற க்யூ ஆர் கோடு அட்டையை அந்த முதியவர் காட்டுகின்றார். வித்தியாசமான அவருடைய இந்த அணுகுமுறையால் பலரும் டிஜிட்டல் முறையில் பிச்சை போட்டு வருகிறார்கள்.

இதனைக் கண்ட பொதுமக்கள் சிலர் அவரிடம் விசாரித்த நிலையில் அதற்கு பதில் அளித்த அவர், தற்போது செல்போன், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் தான் பெரும்பாலான பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. இன்று பரிசில் பணம் வைத்துக் கொள்வது அரிதாக உள்ளதாக தெரிவித்த அந்த முதியவர் தான் மூன்று வங்கி ஏடிஎம் கார்டு வைத்திருப்பதாகவும் க்யூ ஆர் கோட் அட்டையை வைத்துக்கொண்டு டிஜிட்டல் முறையில் பிச்சை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் டிஜிட்டல் முறையில் தான் பலரும் பணம் செலுத்துவதாக அவர் கூறுகிறார். இளைஞர்கள் சிலர் இதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News

Latest News

You May Like