"எல்லாம் பொய்.." நான் அரசு ஹோட்டலை விலைக்கு கேட்டேனா? விக்னேஷ் சிவன் விளக்கம்..!
நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன்.இப்போது அவர் லவ் டூடே புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்கிடையே கடந்த வாரம் புதுச்சேரி சென்ற அவர் புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்தார். இந்த சந்திப்பு கொஞ்ச நேரம் மட்டுமே இருந்தது. இருப்பினும், அந்த மீட்டிங்கை தொடர்ந்து இணையத்தில் ஒரு தகவல் உலா வர தொடங்கியது.
அதாவது புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அம்மாநில அரசின் 'சீகல்ஸ்' ஹோட்டல் இயங்கி வருகிறது. அந்த ஹோட்டலை விக்னேஷ் சிவன் ஏலம் கேட்டதாகச் சொல்லப்பட்டது. அரசு சொத்தை விற்க முடியாது என்று அமைச்சர் லட்சுமி நாராயணன் சொல்லவே, குறைந்தது ஒப்பந்த அடிப்படையிலாவது வாடகைக்குத் தருவீர்களா? என்று கேட்டதாக இணையத்தில் செய்தி பரவியது.இதையடுத்து பலரும் இயக்குநர் விக்னேஷ் சிவனை கிண்டல் செய்யத் தொடங்கினர்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "பாண்டிச்சேரியில் நான் அரசு சொத்தை வாங்க முயன்றதாகப் பரப்பப்படும் செய்தியைக் குறித்துத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் பாண்டிச்சேரி விமான நிலையத்தில் எனது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி பெற அங்குச் சென்று இருந்தேன்.
அப்போது மரியாதை நிமித்தமாக (புதுச்சேரி) முதலமைச்சர் மற்றும் சுற்றுலா அமைச்சரைச் சந்தித்தேன். இந்த சந்திப்புக்குப் பிறகு, அப்போது என்னுடன் வந்த உள்ளூர் மேனேஜர் அவருக்காக ஏதோ விசாரித்து இருக்கிறார். அதைக் காரணமே இல்லாமல் என்னுடன் இணைத்து தகவலைப் பரப்பி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் நீங்கள் உருவாக்கிய மீம்ஸ், ஜோக்குகள் மிகவும் வேடிக்கையாக இருந்தது. ஆனாலும், அவை தேவையற்றவை.. எனவே, இதைத் தெளிவுபடுத்த விரும்பினேன்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த விளக்கமும் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.