நொடியில் நிகழந்த சோகம்!! மின் கம்பி மீது இரும்பு தகடு உரசி இளைஞர் பலி..!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆமூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் அருண்பாண்டியன் (25). முதுகலை பட்டதாரியான இவர், தனது வீட்டிற்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த கொட்டகையை புணரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, கொட்டகையில் இருந்த இரும்பு தகடை இளைஞர் தூக்கி சென்றபோது, அருகில் இருந்த மின்கம்பி தகடின் மீது உரசியதில் இளைஞர் தூக்கி வீசப்பட்டார். உடனே, அக்கம் பக்கத்தினர் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த நிலையில், வரும் வழியிலே இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் விரைந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார், பட்டதாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.