மீண்டும் ஒரு சோக சம்பவம்..! நடைபாதையில் தூங்கியவர்கள் மீது...
புனே நகரின் வகோலி சௌக் பகுதியில், நடைபாதையில் 12 பேர் அசந்து தூங்கி கொண்டு இருந்தனர். அந்த வழியாக, வந்த லாரி, நிலைதடுமாறி அவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்ய, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், 6 பேர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. லாரியை இயக்கிய, 26 வயதான சங்கரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் விசாரணையில் டிரைவர் குடிப்போதையில் இருந்தது தான் விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.