எனக்கு இது ஒரு துக்கமான நாள் – கண்கலங்கிய சரத்குமார்..!
விஜயகாந்தின் இறப்பு செய்தியை கேட்டு அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர் வர முடியாதவர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சரத்குமார் விஜயகாந்தின் மறைவுக்கு நேரில் வரவில்லை என்றாலும் வீடியோ மூலம் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
எனக்கு இது ஒரு தூக்கமான நாள்.. விஜயகாந்த் மருத்துவமனைக்கு செல்லும் பொழுதெல்லாம் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டுபவர்களில் நானும் ஒருவன் என்னுடைய திரை பயணத்தில் மிகப்பெரிய சரிவை நான் பார்க்கும் பொழுது எனக்கு ஆதரவு கொடுத்தவர் விஜயகாந்த் புலன் விசாரணை படத்திற்காக மேக்கப் மேன் ராஜு என்னை விஜயகாந்தை பார்க்க அழைத்துச் சென்றார் அப்பொழுது நான் அவரை நேரில் பார்த்தேன்.
இயக்குனருக்கு உரிய மரியாதை கொடுத்ததை நான் நேரில் பார்த்தேன் மிகப்பெரிய படத்தில் ஒரு புது முகத்தை அறிமுகப்படுத்துவது குறித்து இயக்குனர் சொன்ன பொழுது அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை யார் என்ன என்பது குறித்தும் எதுவும் கேட்காமல் ஒப்புக்கொண்டார் அன்று தொடங்கியது எங்கள் நட்பு அவரை நேரில் பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கம் எனக்குள் இருந்தது.
அண்மையில் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பும் பொழுது கூட நலம் பெற்று விட்டார் என நினைத்தோம்.. எனக்கு இது ஒரு துக்க நாள் இந்த நாளில் நான் சென்னையில் இல்லை என்பது எனக்கு மிகப் பெரிய வருத்தம் விஜயகாந்த் எனக்கு தொடர்ந்து பல படங்களில் வாய்ப்பு கொடுத்தார்.
அவர் தயாரித்த தாய்மொழி என்கின்ற படத்தில் என்னை நடிக்க வைத்து அவர் கௌரவ இடத்தில் நடித்தார் அவருடனான நட்பை எப்பொழுதும் மறக்க முடியாது நடிகர் சங்க தலைவராக இருந்த பொழுது பொதுச் செயலாளரான எனக்கு மரியாதை கொடுத்து நடத்தினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
Actor/Politician #Sarathkumar 's condolence message on the demise of Captain #Vijayakanth #RIPCaptainVijayakanth #RIPVijayakanth @iVijayakant @realsarathkumar @realradikaa pic.twitter.com/GPdvyM2s1F
— Nikil Murukan (@onlynikil) December 28, 2023
Actor/Politician #Sarathkumar 's condolence message on the demise of Captain #Vijayakanth #RIPCaptainVijayakanth #RIPVijayakanth @iVijayakant @realsarathkumar @realradikaa pic.twitter.com/GPdvyM2s1F
— Nikil Murukan (@onlynikil) December 28, 2023