ரயில் பயணிகளுக்கு கொண்டாட்டம் தான்..! இனி இவர்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி - யார் யாருக்கு கிடைக்கும்?
பண்டிகை காலங்களில் ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கவும், சிரமமில்லாத பயணத்தை உறுதி செய்யவும், இந்திய ரயில்வே ஒரு புதிய சோதனை திட்டத்தை அறிவித்துள்ளது. "ரவுண்ட் ட்ரிப் பேக்கேஜ்" (Round Trip Package) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், aller-retour (onward and return) பயணச் சீட்டுகளை ஒரே நேரத்தில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, திரும்ப வரும் பயணத்தின் அடிப்படை கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 20% தள்ளுபடிச் சலுகையை பெற சில முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன
- இந்த சலுகை குறிப்பிட்ட பயணத் தேதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
- செல்லும் தேதி அக்டோபர் 13, 2025 முதல் அக்டோபர் 26, 2025-க்குள் இருக்க வேண்டும்.
- திரும்ப வரும் தேதி நவம்பர் 17, 2025 முதல் டிசம்பர் 1, 2025-க்குள் இருக்க வேண்டும்.
- இந்த திட்டத்தின் கீழ் முன்பதிவு ஆகஸ்ட் 14, 2025 அன்று தொடங்கும்.
- செல்லும் மற்றும் திரும்ப வரும் பயணச்சீட்டுகள் ஒரே பயணிகளுக்கும், ஒரே வகுப்பிற்கும் (உதாரணமாக, படுக்கை வசதி அல்லது 3AC) மற்றும் ஒரே வழித்தடத்திற்கும் முன்பதிவு செய்யப்பட வேண்டும்.
- இந்த சலுகை உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். RAC அல்லது காத்திருப்பு பட்டியல் பயணிகளுக்குப் பொருந்தாது.
- இந்ததிட்டத்தின் கீழ் முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கு, கட்டணத்தை திரும்பப் பெற முடியாது (No Refund). மேலும், பயணச்சீட்டுகளில் எந்த மாற்றமும் செய்ய அனுமதிக்கப்படாது.
- இந்த 20% தள்ளுபடியுடன், ரயில்வேயின் வேறு எந்த விதமான தள்ளுபடிகள், பாஸ்கள் அல்லது பயண வவுச்சர்கள் போன்றவற்றை இணைத்து பயன்படுத்த முடியாது.
ஃபிளெக்ஸி கட்டணம் (Flexi Fare) முறை உள்ள ரயில்களுக்கு இந்ததிட்டம் பொருந்தாது. இந்த திட்டம், பண்டிகை காலத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு ஒரு பெரும் நிதி நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.