1. Home
  2. தமிழ்நாடு

இத்தாலி பிரதமரின் உயரத்தை கிண்டலடித்த பத்திரிகையாளருக்குரூ.4.5 லட்சம் அபராதம்..!

1

இத்தாலியில் சுயாதீன  பத்திரிகையாளராக செயல்பட்டு வரும்  கோர்டீஸே, கடந்த 2021-ல் தனது டுவிட்டர் பக்கத்தில்  தற்போதைய பிரதமர் மெலோனியின் பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு  மெலோனியின்  உயரம் குறித்து கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.  டுவிட்டர் பக்கத்தில் மட்டுமின்றி பல்வேறு சமூக ஊடகங்களிலும், உள்ளூர் ஊடகங்களிலும் அவர் இந்த கருத்தை தெரிவித்து இருந்தார். 

இந்த கருத்து தொடர்பாக இருவருக்குமிடையில் சமூக  வலைதளத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில்  மெலோனி கோர்டீஸே மீது நீதிமன்றத்தில் உருவ கேலி வழக்கு தொடுத்திருந்தார். 

இந்நிலையில் இந்த வழக்கை  விசாரித்து வந்த மிலான் நீதிமன்றம் தற்போது கோர்டீஸேக்கு  5000 யூரோக்கள் (ரூ.4.5 லட்சம்) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

இந்த தீர்ப்பு குறித்து பேசியுள்ள கோர்டீஸே, கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்துக்கு எதிராக தீவிர பிரச்னையை இத்தாலி அரசு கொண்டுள்ளது. இது சுயாதீன பத்திரிகையாளர்களுக்கு கடுமையான காலம். வரும் காலத்தில் சிறந்த நாட்களுக்காக நாம் காத்திருப்போம். நாங்கள் மனம் தளரப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.   

Trending News

Latest News

You May Like